எதிரணி எம்.பி விசாரணைக்கு அழைப்பு
investigation
cid
manusha nanayakara
By Sumithiran
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்ற விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
எனினும் எந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி இவ்வாறு சமூகமளிக்குமாறு அழைப்பு வந்துள்ளதாகவும் ஆனால் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடி ஜனாதிபதி சட்டத்தரணிகளான திஸ்ஸ விஜயகுணவர்த்தன மற்றும் பர்மான் காசிம் ஆகியோரின் ஆலோசனை பெற்று செயற்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.