NPP ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் நாடகம் : பிரதி அமைச்சர் சாடல்

Udaya Gammanpila NPP Government Gamagedara Dissanayake
By Independent Writer Apr 06, 2026 05:28 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைச் சகித்துக்கொள்ள முடியாமலும், தமது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தற்போது எதிர்க்கட்சிகள் இணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "உலகில் எங்குமே இல்லாத வகையில் மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் சிறுபிள்ளைத்தனமான ஒரு எதிர்க்கட்சியே இலங்கையில் உள்ளது.

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

உலகளாவிய பொருளாதார நெருக்கடி

நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் ஈரானியப் போர்ச் சூழலால் உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எப்படியாவது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற குறுகிய நோக்குடன் அவர்கள் செயற்படுகின்றனர்.

NPP ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் நாடகம் : பிரதி அமைச்சர் சாடல் | Opposition Parties Plot To Overthrow Npp Govt

கடந்த காலங்களில் பாம்பும் கீரியும் போல் பரம எதிரிகளாகப் பிரிந்து செயற்பட்ட எதிர்க்கட்சியினர், இப்போது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஒரே மேடையில் ஒன்றுகூடி நாடகமாடுகின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்கள் வெற்றியடைவதால் தமது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற பயமே இந்தத் திடீர் ஒற்றுமைக்குக் காரணமாகும். 

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

புத்தகம் வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரால் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வுக்கு அனைத்து எதிர்க்கட்சியினரையும் வரவழைத்து, ஏதோ பெரிய விந்தையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போன்ற மாயையை அவர் ஏற்படுத்தினார். இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகங்களாகும்.

NPP ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் நாடகம் : பிரதி அமைச்சர் சாடல் | Opposition Parties Plot To Overthrow Npp Govt

அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வீதியில் இறங்கிப் போராடத் திட்டமிட்டு வருகின்றன. எனினும், மக்களின் ஆதரவுடன் இந்தச் சூழ்ச்சிகளை அரசாங்கம் முறியடிக்கும்." என தெரிவித்தார்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025