பதற்றத்தை உருவாக்கும் பணியில் எதிர்க்கட்சியினர்
sri lanka
people
dilan perera
By Shalini
தேசிய பாதுகாப்பானது நாட்டில் தற்போது நல்ல நிலைமையில் உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மாற்றுவதற்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் முயன்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் கத்தோலிக்க திருச்சபைகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.