ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒத்திவைத்த எதிர்க்கட்சி
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய கல்வித் தொகுதிகளிலும் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கவலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சேர்க்க கட்சி கூடுதல் நேரத்தைக் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கலந்துரையாடல்கள்
பரந்த ஆதரவைப் பெறுவதற்காக மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களுடன் மேலும் கலந்துரையாடல்கள் தேவைப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கட்டத்தில் பிரேரணையை சமர்ப்பிப்பதால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்படாமல் போகலாம் என்ற கவலையும் எதிர்கட்சிக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |