கோட்டாபயவின் அரசாங்கம்! சிம்பாவேயின் நிலைமையை நினைவுபடுத்திய எதிர்க்கட்சி
கோட்டாபயவின் ஆட்சியைப் பார்க்கும் போது சிம்பாப்வே தான் நினைவிற்கு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்பாவேவின் முன்னாள் ஜனபதிபதி முகாபே நாசமாக்கி வீழ்ச்சியின் பாதையில் கொண்டு சென்றதை போலவே கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமும் செயற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கடந்த 2020ஆம் ஆண்டில் 65 ஆயிரம் கோடி ரூபாவும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 20, 800 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளன. அண்மையில் 50,000 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இனியும் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் மக்கள் கருத்தை கேட்டறிந்த பின்னர், அதன் ஆட்சியை கொண்டு செல்ல முடிந்த தரப்பிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிம்பாப்பேவை எடுத்துக் கொண்டால் ஒரு அமெரிக்க டொலருக்கு 280 கோடி சிம்பாவே ரூபா கொடுக்க வேண்டியிருந்தது. இறுதியாக அமெரிக்க டொலர்களில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க நேர்ந்தது.
முகாபே என்ற ஜனாதிபதி நாட்டின் விவசாயத்துறை மீது கைவைத்தார், இராணுவ மயமாக்கி நாட்டின் உற்பத்தியை முழுமையாக நாசமாக்கினார்.
அடிப்படைவாதத்தை பரப்பி, நாட்டுக்குள் பிரச்சினைகளை உருவாக்கி, வெளிநாடுகளிடம் கடன்களை பெற்று முடியாத கட்டத்தில் நாட்டில் பணம் அச்சடித்தார்.
உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உணவுகளை கூட இறக்குமதி செய்தார். இதுவே ஸிம்பாப்பேவை வீழ்த்தியது. இந்த நாடும் அதே பாதையில் பயணிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.