நாட்டை முடக்குங்கள் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை - அரசாங்கம் மௌனம்
opposition
govermant
national lockdown
By Sumithiran
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கும்படி எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவர்களது கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகியன இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
எனினும் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாட்டை முழுமையாக முடக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி