பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
பதில் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் தானும் சமூக ஊடகங்களில் தாக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம்சாட்டியுள்ளார்..
மாத்தறை சமூக காவல்துறை பிரிவுக்கான கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு
“அவர்களில் பெரும்பாலானோர் மதத் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களாகவே உள்ளனர்.
தேஷபந்து தென்னகோன் காவல்துறைமா அதிபராக வருவதற்கு போராடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கொழும்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதைப் போன்று நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்புவது உண்மையே ஆகும்.
தற்போதைய காவல்துறைமா அதிபருடன் அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நம்புகிறோம்.
அத்துடன் தேஷபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபராக ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணிகள், போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முன்னிலையாகவுள்ளேன்.” என்றார்.
சஜித்தின் காலப்பகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |