சஜித்தின் காலப்பகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த போது கட்டி முடிக்கப்படாத 2,150 வீடமைப்பு திட்டங்களில், 39,815 பாதி கட்டப்பட்ட வீடுகளின் பணிகளை விரைவாக முடிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள சோலார் பேனல் வீடமைப்புத் திட்டம் மற்றும் கிராமத்துக்கான மின் உற்பத்தி நிலையத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளரினால் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த (2015-2019) நான்கு ஆண்டுகளில், நாடளாவிய ரீதியில் 2,158 கிராமங்களில் 42,610 வீட்டுத் தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அப்பணிகள் ஓரளவு நிறைவு பெற்றன.
நிதி ஒதுக்கீடு
பெரும்பாலான வீடுகள் வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளதாகவும், அதன் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும் கடந்த கால தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில், ஒரு வீடமைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகை பல வீடமைப்புக்களுக்கு பகுதிகளாக பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சஜித் பிரேமதாச காலத்தில் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட 8 கிராமங்களில் 2,795 வீடுகளின் பணிகளை 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இதன்படி, அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அந்த கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |