பிரான்சில் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
பிரான்சில் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றோடு குளிர்காலம் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் குளிர் கடுமையாக வாட்டி வருகிறதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பிரான்ஸ் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சற்று முன் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குறித்த மாவட்டங்களில் -15 டிகிரி உறை குளிர் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Chérac மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடும் புயலுடன் கூடிய மழை பொழியும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இன்றோடு குளிர் நிறைவடைவதாகவும், நாளை வெப்பநிலை மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் மேலும் குரிப்பிடப்பட்டுள்ளது.