சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இலங்கையில் வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை விற்பனை செய்வதற்கும் கைமாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(22) குறித்த தடையை விதித்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையொன்றின் பிரகாரம், இலங்கையில் சுமார் 112 வாகனங்கள் வரி ஏய்ப்புச் செய்து மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த வாகனங்கள் உரிய முறையில் சுங்கத் திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் போலியான ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டு, பெறுமதி குறைந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இதன் பிரகாரம், குறித்த வாகனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவற்றை வேறு நபர்களுக்குக் கைமாற்றவோ, விற்பனை செய்யவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |