அதிக வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த சாகுபடி நிலங்கள் : விவசாயத் திணைக்களம் அறிவிப்பு
பெரும்போக பருவத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் சாகுபடியைத் தவிர மொத்த சாகுபடி நிலத்தில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023-24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பிற பயிர்களுடன் பயிரிடப்பட்ட மொத்தம் 68,131 ஹெக்டேர் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், இதே காலப்பகுதியில் பெரும்போக பருவத்தில் பயிரிடப்பட்ட 100,000 ஹெக்டேயர் நெற்பயிர்களும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன.
காய்கறிகளின் விலை
இது தவிர, மேலும் 23,874 ஹெக்டேயர் நிலத்தில் காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் பயிரிடப்பட்டு பூச்சிகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன, மொத்தம் 27 சதவீதம் சாகுபடி நிலம் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஏப்ரல் மாதத்தில், காய்கறி மற்றும் பழ சாகுபடி மீண்டும் ஒருமுறை மேம்பட்டுள்ளதாகவும் அதனால் தற்போது அறுவடை அதிகரித்துள்ளதாகவும் விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
சாதகமான காலநிலை காரணமாக, அதுவும் குறிப்பாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மரக்கறி மற்றும் பிற பயிர்ச்செய்கை மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், இதனால் காய்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |