வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு : விமல் வீரவன்சவிற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் கூட்டுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராகப் பணியாற்றியபோது தனது சட்டபூர்வ வருமானத்தை மீறிய சட்டவிரோதச் சொத்துக்களைச் சேர்த்தது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தில் சந்தேக நபராக உள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்த நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வழக்கின் சாட்சிய விசாரணைக்காக, அரசுத் தரப்பு சாட்சிகளான 5, 55 மற்றும் 56 ஆம் எண் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி இன்று அழைப்பாணையும் பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |