யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு
நாடளாவிய ரீதயில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலிவிட்ட சுத்தா' என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பேருந்துகள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல காவல்துறையினர் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 596 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |