விமான நிலையம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உடனடி உத்தரவு
சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான தடைகளை உடனடியாக நீக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பின்னர் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..
எதிர்காலத்தில் இது 1500 - 2000 வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் விமான நிலையத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறவும், அவர்களின் பொருட்களை எடுத்துச் செல்லவும், சுங்க சேவைகளுக்காகவும் தனித்தனி சாவடிகளை அமைக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த காலக்கட்டத்தில், தொற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பான சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க விமான நிலையத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டுகிறார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 14 மணி நேரம் முன்