கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்கியது யார்? பகிரங்கப்படுத்திய சசீந்திர ராஜபக்ச
அரசாங்கத்தின் சேதன பசளை திட்டத்திற்கு சில ஊடக நிறுவனங்களின் பிரதானிகளே சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) ஆலோசனை வழங்கியுள்ளதாக சேதன பசளைத் திட்ட இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எனினும் செய்திகளைப் பிரசுரிக்கும் போது அவர்கள், குறித்த விடயத்தினை தெரிவிப்பதில்லை எனவும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பெயர் கூற முடியாத சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களே அரச தலைவருக்கான செயலணியின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அவர்களே அரச தலைவருக்கு ஆலோசனை வழங்கினர்.
ஆனால் செய்திகளில் அவ்வாறான விடயங்கள் வெளியிடப்படுவதை காணமுடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஊடக நிறுவன பிரதானியான திலித் ஜயவீர (Dilith Jayaweera) அரச தலைவர் செயலணி உறுப்பினராக இருப்பதுடன் அரச தலைவருக்கு அவர் மிகவும் நெருங்கியவராக இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.