சிக்கிய மற்றுமொரு இலங்கைத் தமிழர்! வெளிவரும் ஆவணங்கள்
வெளியிடப்படாத சொத்துக்களைப் பெற்ற பல நபர்களின் விபரங்களை வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன.
இலங்கையில் பதவியிலிருந்த இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் ஒரு பிரதமரின் ஆலோசகராக இருந்த இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (BVI) பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் மூலம் நிறுவனத்திற்கு இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், ஹொரைசன் கொலிஜ் ஒஃப் பிசினஸ் அண்ட் டெக்னோலஜி (HCBT) நிறுவனத்தின் மூலம் நிதியளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம், ஜனவரி 2008 இல் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதுதவிர, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து, இங்கிலாந்தில் சொத்து வாங்கியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,