தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறியுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
MP
Ministry of water supply
water bill
By Kanna
இதுவரை 6 பில்லியன் மதிப்புள்ள தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தண்ணீர் கட்டணம் செலுத்தாத நுகர்வோரில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே அந்நாடாளுமன்ற உறுப்பினர்களை நீர் கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரின் நீர் இணைப்பை துண்டிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்