கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் அநுர அரசின் இரகசிய நகர்வுகள் முறியடிப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான (Eastern University, Sri Lanka) பேரவை உறுப்பினர்களின் நியமனத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதமான சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக இருக்கக்கூடியவர் பல சிங்கள உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளார்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக பேரவை உறுப்பினர்களின் விபரம் பின்வாங்கப்படுகின்றது.
தமிழ் சமூகம் வாழக்கூடிய ஒரு சூழலில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்களவர்களை நியமிப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் ஆகியோர் பெருமளவு பணத்தை மீதப்படுத்தியுள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிமாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்டிருப்பதால் பேரவையின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு உறுப்பினருக்கு முப்பதாயிரம் ரூபாவிற்கு மேல் செலவாகும்.
பிமல் ரத்நாயக்க கூறிய விடயத்திற்கு தமிழர் பகுதிகளில் கிளீன் சிறிலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்த சிங்களவர்களை நியமிப்பதற்கு பயன்படுத்துகின்றீர்களா.
சிங்கள மக்கள் தங்களுக்குரிய உரிமைகளையும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் தான் தமிழ் விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட வரலாறுகள் உள்ளன.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கியது வெறுமனே அரசியல் செய்வதற்கு தான். தமிழர் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கல்ல.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெரும் ஆக்கிரமிப்புச் சம்பவம் ஒன்று மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் முயற்சியினால் தடுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்