பெருங்‘குடி’ மக்களால் மன்னாரில் ஏற்பட்டது வாகனநெரிசல்
மதுபானசாலைகளை திறக்க இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மன்னார் முருங்கன் மற்றும் உயிலங்குளப் பகுதிகளில் உள்ள மதுபான நிலையங்களில் குடிகார பெருமக்கள் அலைமோதுவதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மதுபானசாலைகளை திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகி சற்று நேரத்தில் மதுக்கடைகளுக்கு முன்பாக பெருங்குடி மக்கள் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி காத்திருந்து தமக்குத் தேவையான குடிபான வகைகளை கொள்வனவு செய்தமையை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் பெருங்குடி மக்கள் அனைவரும் 5000 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்ததாக மதுபானசாலை நடத்துநர்களும் தெரிவிக்கின்றனர் மதுபான கொள்வனவுக்கு என நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது போத்தல்களை பெற்று செல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது
குறிப்பாக முருங்கன் மதுபானசாலைக்கு முன்னால் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் இன்று மாலை தொடக்கம் மது பிரியர்கள் வரிசையாக காத்திருந்து மதுபானங்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடதக்கது.










