நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வு இன்று (31) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்வதற்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் சென்றனர்.
292ஆவது ஆண்டாக கொண்டாடப்பட்டது
அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூஜைகள் செய்தனர்.

இந்த வழிபாட்டு முறை நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மரபாக பண்பாட்டு விழாவாக காலம் காலமாக பேணப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இப்புதிர் விழா 292ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி