50,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 70 சதவீதமான வீடுகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 115,757 வீடுகளுக்கு இதுவரை பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார்.
டித்வா சூறாவளியின் பாதிப்பு
இதற்கிடையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இழப்பீடு விநியோகமும் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 சிறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 12.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்களை மீட்டெடுப்பதற்கும் மீண்டும் நிறுவுவதற்கும் நோக்கமாகக் கொண்டு இழப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்