கைப்பற்றப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் சொத்து!
கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற பாதாள உலக குற்றவாளியின் ரூ.50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினாரல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, பாதாள உலக குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரமான உண்மைகள்
இலங்கையில் இருந்து இந்தோனேசியா புறப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோரின் தலைமையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை கொண்டு வந்து விசாரித்ததில் நாட்டில் செயற்பட்டு வந்த பாரிய போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் கொலை குற்றங்கள் தொடர்பான பயங்கரமான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும், அண்மையில் பத்மே வழங்கிய தகவலின் பேரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
