பல ஆயிரம் டொலருக்கு விற்பனையாகும் 10 வயது சிறுவனின் ஓவியம்!
ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் வரைந்த ஓவியம் 80 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகியமை தற்போது வைரலாகியுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில் இருந்து ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார்.
2012ஆம் ஆண்டில் பிறந்த மிகைல், தனது பெற்றோர் பரிசாக கொடுத்த கை வண்ணப்பூச்சுகள் மற்றும் கேன்வாஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.
80,000 டொலர் மதிப்பு
அதன் பின்னர் ஏழு வயதிற்குள் அவர் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானார்.
இந்த நிலையில், மிகைல் அகரின் ஓவியம் ஒன்று நியூயார்க் உயர் சமூகத்திற்கு 80,000 டொலர் மதிப்பில் விற்பனையாகியுள்ளது.
ஜேர்மனின் பெர்லின், ஹாம்பர்க், முனிச் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கண்காட்சியில் மிகைலின் பல ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
இளம் ஓவரியரான மிகைல் தற்போது 165 அடி நீளமுள்ள கேன்வாஸ் ஓவியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 4 மணி நேரம் முன்
