பாகிஸ்தானில் சுட்டுகொல்லப்பட்ட தலிபான் அமைப்பினர்
பாகிஸ்தானில் (Pakistan) 13 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் -இ -தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இதையடுத்து, வெளியான தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாதிகள்
இந்த தாக்குதலில் பத்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கெச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அத்தோடு, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
