சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்: இந்தியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி
சீனாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று ரொக்கெட் உற்பத்திகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம். ஆட்டிலா என்ற வர்த்தக கப்பல் ஒன்று மும்பை நவசேவா துறைமுகம் பகுதியில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த கப்பலானது, உளவுப் பிரிவின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி சோதனையிடப்பட்டது.
சோதனை
மால்டா நாட்டு கொடியுடன் தடுத்து நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் அணு ஆயுத திட்டத்திற்கு பயன்படுத்தப்பட கூடிய பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாமென அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கப்பலில், இத்தாலி நாட்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட கணினியால் கட்டுப்படுத்தக் கூடிய சி.என்.சி. இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ வளர்ச்சி
அதேவேளை, கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை சேர்ந்த குழுவினரும் ஆய்வு செய்த நிலையில், அணு ஆயுத திட்டத்திற்கு பாகிஸ்தான் இதனை பயன்படுத்த கூடும் என அதிகாரிகள் தரப்பில் உறுதிசெய்துள்ளனர்.
மேலும், இந்தப் பொருட்கள், பாகிஸ்தானின் இராணுவ வளர்ச்சி திட்டத்திற்கான முக்கிய பொருட்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |