ஈரானிய போர் விமானங்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் : வெளியான பரபரப்பு தகவல்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களிலிருந்து தங்கள் உயர்ரக இராணுவ விமானங்கள் சிலவற்றை பாதுகாக்க அவற்றை பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதிப்பேச்சில் நடுவராக செயற்படும் நிலையில் பாகிஸ்தானின் இந்த செயல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு பின்னர் அனுப்பப்பட்ட விமானங்கள்
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஈரானிய விமானப்படையின் RC-130 உளவு மற்றும் புலனாய்வு விமானம் உட்பட பல விமானங்களை ஈரான், நூர் கான் விமானத் தளத்திற்கு அனுப்பியதாக அந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் தெரிவித்தது.

இந்தக் கூற்றை ஒரு மூத்த பாகிஸ்தான் அதிகாரி நிராகரித்தார். அந்த அதிகாரி கூறியதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கையில், “நூர் கான் தளம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு பெரிய விமானக் குழுமத்தைப் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்க முடியாது.”
ஆப்கானிலும் ஈரானிய விமானங்கள்
இதேபோல், தனது சில சிவிலியன் விமானங்களை அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
🔊PR No.1️⃣1️⃣6️⃣/2️⃣0️⃣2️⃣6️⃣
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) May 12, 2026
Official Response to CBS Report on Iranian Aircraft in Pakistan
🔗⬇️ pic.twitter.com/ZqJw28nNaK
ஒரு மஹான் ஏர் பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் தரித்து நிற்பதாக ஆப்கானிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
அதே நேரத்தில், நாட்டில் எந்த ஈரானிய விமானமும் இருப்பதை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் மறுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நெருங்கிய சகாவான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், "இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் வகிக்கும் பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |