விற்பனைக்கு வரும் பாகிஸ்தான் விமானங்கள்: IMF திட்டம் செயல்பாட்டில்!
தேசிய விமான நிறுவனத்தின் 51–100 வீத பங்குகளை விற்க பாகிஸ்தான் முயன்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான PIA வின் ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருநிறுவனங்கள்
இந்த ஏலம் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏலத்திற்கு முன்கூட்டியே தகுதி பெற்ற நான்கு நிறுவனங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஃபௌஜி அறக்கட்டளையின் ஒரு பகுதியான ஃபௌஜி உரக் கம்பெனி லிமிடெட் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, லக்கி சிமென்ட் கன்சார்டியம், ஆரிஃப் ஹபீப் கார்ப்பரேஷன் கன்சார்டியம் மற்றும் ஏர் ப்ளூ லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ஃபௌஜி உர நிறுவனமானது பாகிஸ்தானில் மிகப்பெரிய பெருநிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
மேலும், பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்த நபராக விளங்கும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஃபௌஜி இந்த அறக்கட்டளையின் மீது மறைமுக செல்வாக்கைச் செலுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |