புத்தாண்டு கொண்டாட்டங்களை முற்றிலும் தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக,அந்நாட்டு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.
திடீரெனெ அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
'போரின் காரணமாக நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்
வன்முறையில் ஈடுபடுகிறார்கள்
அதனால்,எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறுகின்ற இந்தப் போரில் இஸ்ரேல் மனிதாபிமானமின்றி வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும்,
எல்லை மீறி செயற்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மூன்றாவது முறையும் உதவி
இந்தப் போரினால் இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காசாவிற்கு அனுப்பியுள்ளது, மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளது என்பதையும் அவர் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |