விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முழுவதும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது என்று முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கூட்டு இராணுவப் பயிற்சியை அநுர அரசாங்கம் இரத்து செய்தமை தொடர்பாக கடும் விமர்சனத்தை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு,
ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த சம்பவம்
குறிப்பாக நான்காம் கட்ட ஈழப் போரின் போது ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண தீபகற்பத்தை முற்றுகையிட்ட பின்னர், வடக்கின் கடைசி கோட்டையைத் தாக்க அச்சுறுத்திய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்ட பல ரொக்கெட் ஏவுகணைகள் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட ஆயுதங்களில் அடங்கும்.
இந்தியாவால் தொடங்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை பெரும் விலை கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கூறினார்.
கடற்படை பயிற்சி இரத்திற்கு அநுர அரசு பதிலளிக்கவேண்டும்
அத்துடன் திருகோணமலையில் SLN மற்றும் PNS (பாகிஸ்தான் கடற்படை கப்பல்) அஸ்லட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு கடற்படைப் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் தலையிட புது டில்லிக்கு வழி வகுத்ததா என்று கேட்டார்.
திருகோணமலையில் திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சியை இலங்கை இரத்து செய்த நேரத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பதை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 2024 ஜனவரி 01 அன்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட தடையையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையை ஆராய வேண்டும் என்று கூறினார்.
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள்
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகர கூறினார். விக்ரமசிங்க விதித்த தடை குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இறுதியில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் குறித்து அரசாங்கத்தின் அறிக்கைகளைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய விரும்புகிறோம் என்று வீரசேகர கூறினார்.
உண்மையில், ஏப்ரல் 05 அன்று இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் எதிர்க்கட்சி அதன் உள்ளடக்கங்களை வெளிப்படுத்த அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
ஜெனிவாவில் இலங்கையை காப்பாற்றிய நாடு பாகிஸ்தான்
பல ஆண்டுகளாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையை எப்போதும் ஆதரித்த சில நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒன்றாகும் என்று முன்னாள் அமைச்சர் வீரசேகர கூறினார்.
அரசாங்கத்தின் மீதான தனது பிடியை இறுக்குவதால், இந்தியா சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று வீரசேகர குற்றம் சாட்டினார். அரசாங்கம் இந்திய அழுத்தத்திற்கு சாந்தமாக அடிபணிந்து, பாகிஸ்தானுடனான நீண்டகால உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது என்று முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
