தடுமாறும் பாகிஸ்தான் - வெற்றி இலக்காக 319 ஓட்டங்கள்
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் துடுப்பாட்ட போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட செய்த நியூசிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 131 ஓவர்களில் 449 ஓட்டங்களை பெற்று சகலரும் ஆட்டமிழக்கப்பட்டனர் .
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 ஆட்டமிழப்புகளும் , நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 ஆட்டமிழப்புகளையும் மேற்கொண்டனர்.
41 ஓட்டங்கள் முன்னிலை
பின்னர் முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஆட்டமிழப்புக்கு 407 ஓட்டங்களை எடுத்தது.
ஷகீல் 124 ஓட்டங்களும் , அப்ரார் அகமது ஓட்டமின்றியும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டமுடிவின் தொடக்கத்தில் அப்ரார் அகமது ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 408 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது . இதனை தொடர்ந்து 41 ஓட்டங்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.
ஓட்டமின்றி 2 ஆட்டமிழப்பு
தொடக்கத்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டேவான் கான்வே ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய டொம் லெதம் அரைசதம் கடந்து 62 ஓட்டங்களோடு வெளியேறினார்.
அடுத்து கேன் வில்லியம்சன்,டொம் பிளெண்டல் , பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்தனர். இறுதியில் 83 ஓவர்களுக்கு 273 ஓட்டங்கள் எடுத்தபோது நியூசிலாந்து அணி ஆட்டத்தை நிறுத்தி கொண்டது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 319 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் , மிர் ஹம்சா ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் ஓட்டமின்றி 2 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
