பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அநுரவின் புகழ்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணி துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் பாராட்டியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதல்
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான்பாகிஸ்தான் அமைப்பை பாகிஸ்தான் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை குழாமின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் பணிக்குழாமினர் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக பாதுகாப்பை பாகிஸ்தானிய பாதுகாப்பு பிரிவுகள் உறுதிப்படுத்தியதையடுத்து இலங்கை அரசாங்கமும், இலங்கை பாதுகாப்பு பிரிவும் அதற்கு அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


