காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
police
death
women
palai
investication
By Vanan
பச்சிலைப்பள்ளி பளை தம்பகாமம் குளப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதே இடத்தில் காணாமல் போன 44 வயதுடைய பெண்ணினுடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காணாமல் போன குறித்த பெண்ணை உறவினர்கள் தேடி அலைந்த நிலையில், இன்று தம்பகாமம் குளிர் பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோரின் விசாரணைகள் நிறைவடைந்த பின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்