கட்டுநாயக்கா புத்தர் OK - பலாலியில் நடராசர் NO... நியோ டிசைன் நல்லிணக்கம் !!
சிறிலங்காவின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்காவின் உள்ளேயும் வெளியேயும் புத்தர் சிலைகள் இருக்கும்போதெல்லாம் வராத இலங்கையின் மதநல்லிணக்கக் கேடு, தமிழர்களின் பலாலி விமான நிலையத்தில் ஒரு குட்டி நடராசர் சிலையை வைத்தால் மட்டும் வந்துவிடும் என நினைப்பது என்ன டிசைன் என்பது தெரியவில்லை.
இந்த நடராஜர் சிலை வைப்பதற்குச் சிறிலங்காவின் கலாச்சார அமைச்சர் விரும்பிக்கொண்டாலும் சிஸ்டம் சேஞ்ச் ஆட்சியின் முக்கிய தமிழ் அமைச்சர் சந்திரசேகரன் அந்த நகர்வுக்குக் கல்லுக்குத்தினார் என்ற விடயம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சங்கிலி மன்னன் குறித்த நிகழ்வில் அம்பலப்பட்டது.
இந்தக் கல்லுக்குத்தல்களால் லண்டனில் இருந்து வழங்கப்பட்ட இந்த நடராஜர் சிலை, தற்போது யாழ்ப்பாணத்தின் நாக விகாரைக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை 2019 இல் உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் சதியில் மாட்டுப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, தனக்கு எதிர்வரும் பத்தாம் திகதி பிணைகிட்ட வேண்டும் என்பதற்காகச் சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் கஞ்சனிபாணி மூளைக்கோளாறு உட்பட்ட 2.0 நடிப்புகள் தென்னிலங்கையில் இருந்து வெளிப்பட, சந்திரசேகரன் போன்றவர்களின் நடராசர் சிலையை வைத்தால் நல்லிணக்கத்துக்கு ஐயகோ என்ற நடிப்புகளும் வெளிவரும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...
சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |