ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி
பலஸ்தீனம் (Palestine) ஐக்கிய நாடுகள் (UN) சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்க தகுதியான நாடு என்று அதன் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அங்கு பலஸ்தீனத்துக்கு ஆதரவாக 143 வாக்குகளும், இஸ்ரேல்(Israel), அமெரிக்கா (US) உள்ளிட்ட 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
அத்தோடு, 25 நாடுகள் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரேரணைக்கு எதிர்ப்பு
இருப்பினும், பலஸ்தீனம் அந்த அமைப்பின் முழு அங்கத்துவத்திற்கு தகுதியற்றது மற்றும் உறுப்புரிமை வழங்குவதற்கான முடிவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மட்டுமே எடுக்க முடியும்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் நிரந்தரப் பிரதிநிதி இது தொடர்பான பிரேரணைக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறுவதற்கான பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக இலங்கையும் (Sri Lanka) வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |