வலுப்படுத்தப்படும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜுலி சங் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்
இலங்கையில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது தான் நாமல் ராஜபக்சவிடம் கேட்டறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த சிறந்த கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
As part of our outreach across the range of Sri Lankan parties, met with Namal Rajapaksa @RajapaksaNamal in his new role as SLPP national organizer to hear about political engagement, including issues affecting youth, and exchange views on strengthening US-SL relations. pic.twitter.com/2zSOCWAX5H
— Ambassador Julie Chung (@USAmbSL) May 11, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |