பாலிதவிற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகள்: விளக்கமளிக்கும் திகதி அறிவிப்பு
அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டாண்டுகளுக்கு நீடிப்பு தொடர்பில் தான் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (03.06) விளக்கமளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
தாம் செவ்வாய்கிழமை வெளியிட்ட கருத்து தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி நீண்ட விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அவசியமில்லை
இந்நிலையில், அதிபர்மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பாலித ரங்க பண்டார செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நாட்டின் தற்போதைய தேவை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சிகள் எதிர்ப்பு
அத்துடன், நாடாளுமன்றில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) இந்த யோசனை திட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, பாலிதவின் குறித்த கருத்திற்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என அனைத்து கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |