எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம்

Pillayan S. Viyalendiran Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker May 30, 2024 06:50 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அரசாங்கம் அதிபர் தேர்தல் உட்பட எந்த தேர்தலையும் பிற்போடாது எனவும் அதிபர் தேர்தல் நடைபெற்று அதன் பின்னர் ஏனைய தேர்தல்களும் நடைபெறும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்திற்கான பிரதான வீதி கார்ப்பெட் வீதியாக புனரமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று புதன்கிழமை(29) மாலை திறந்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 85மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த 2கிலோ மீற்றர் வீதியானது இவ்வாறு புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு...! மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு...! மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

அதிபர் தேர்தல்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் , இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெருளியியலாளர் , கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம் | Presidential Election 2024 Srilanka Viyalendiran

சுமார் 40வருடமாக புனரமைக்கப்படாத நிலையிலிருந்த இந்த வீதியை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ”அரசியலமைப்பின் பிரகாரம் சட்டதிட்டத்தின் படி அதிபர் தேர்தல் நடைபெறவேண்டும்.

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

 நாடாளுமன்ற தேர்தல்

அதிபர் தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது.ஒதுக்கப்பட்ட நிதியின் பிரகாரம் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம் | Presidential Election 2024 Srilanka Viyalendiran

தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை தெரிவிக்கமுடியும்.ஜனநாயக நாட்டில் அதற்கான சுதந்திரம் இருக்கின்றது.சட்டத்தின் அடிப்படையில் ஒக்டோர் அதிபர் தேர்தல் நடைபெறவேண்டும்.

அதற்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு இன்னும் ஆயுட்காலம் இருக்கின்றது. அதிபர் தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம்.

ஆனால் அதற்கு இடையில் இன்னும் இரண்டு தேர்தல்கள் இருக்கின்றது. ஒன்று மாகாணசபை தேர்தல் அது இன்னும் நடைபெறவில்லை.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்

வலிமையான அரசியல் கட்டமைப்பு

அது நீண்டகாலமாக பிற்போடப்பட்டுவருகின்றது.அதுபிற்போடப்படுவதற்கு எமது தலைவர்களும் கடந்தகாலத்தில் உடந்தையாக இருந்தார்கள்.

எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம் | Presidential Election 2024 Srilanka Viyalendiran

மாகாணசபை தேர்தல் நடைபெறவேண்டும்.அதேபோன்று உள்ளுராட்சிமன்ற தேர்தலும் நடாத்தப்படவேண்டும். அதிபர் தேர்தல் நடைபெறவேண்டும்.

அதில்மாற்றுக்கருத்து இல்லை.இந்த மாகாணத்தில் வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாகத்தான் எமது இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அரசியல் கொள்கையுடன் நாங்கள் பயணிக்கின்றோம்.

ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் இரண்டு வருடத்திற்கு தேர்தல்களை பிற்போடுவது குறித்துபேசியிருக்கின்றார்.அது அவருடைய கட்சிசார்ந்த கருத்து.

ஆனால் எங்களுடைய நிலைப்பாடு சட்டத்தின்படி என்ன தேர்தல் நடைபெறவேண்டுமோ அது சட்டத்தின் படி நடைபெறும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026