யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு...! மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு
யாழ்ப்பாணம் - சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கபடவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
சுழிபுரம் காட்டு புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காட்சியினை நில அளவை திணைக்களம் கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுபுலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுதப்பட்டனர்.
இந்நிலையில் தாம் திரும்பி செல்வது தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
காணி சுவீகரிப்பு
இதனையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலதிகாரியுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் எதிர்ப்பினை தெரிவித்தார்.
இந்நிலையில் மேலதிகாரியினால் மீள வரும்படியாக உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து சட்டத்தரணி சுகாசினால் உரிமையாளரின் எதிர்ப்பு கடிதமும் பாரதீனபடுத்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு நில அளவை திணைக்களம் அகன்று சென்றது.
இதன் பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.போராட்ட நிறைவில் கஜேந்திரனும் கடற்படை முகாமினை கண்காணித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |