யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் : இளைஞர் கைது
யாழில் காவல்துறையினரின் திடீர் சுற்றிவளைப்பில் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (29) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவினர்
இதனடிப்படையில், அச்சுவேலி உதவி காவல்துறை பொறுப்பதிகாரியும் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான காவல்துறை பரிசோதகர் பாலசூரிய தலைமையிலான குழுவினரால் மேற்படி கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தி
அத்தோடு, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் (30) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |