யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - சுழிபுரத்தில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (K.Sugash) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு பணிகள் நடைபெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அழைப்பு விடுப்பு
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை காலை 9.00 மணிக்குச் #சுழிபுரத்தில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
— Kanagaratnam Sugash (@Sugashkanu) May 29, 2024
எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் #கடற்படைக்குச் சுவீகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மண்ணைக் காக்க நாளை காலை சுழிபுரத்தில்…
“எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படைக்குச் சுவீகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எமது மண்ணைக் காக்க நாளை (30) காலை சுழிபுரத்தில் அணிதிரளுமாறு தாயகத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |