வங்கிகளில் கடன்களை செலுத்த தவறியவர்களே பரேட் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர் : மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்து
வங்கிகளில் கடன்களை செலுத்த தவறியவர்களே பரேட் சட்டத்தை நீக்குமாறு கோரி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர்,
பெரும் அநீதி
குறைந்த எண்ணிக்கையிலான மக்களின் தேவைகளுக்காக பரேட் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அது வைப்பாளர்களுக்கும் எதிர்காலத்தில் கடன்களை எதிர்பார்க்கும் மக்களுக்கும் பெரும் அநீதியாக அமையும்.
இது தொடர்பில் ஒரு சிலர் மாநாடுகளை ஏற்பாடு செய்து அழுத்தங்களை பிரயோகித்துள்ளதோடு, பொதுமக்களின் வைப்பு நிதி பாதுகாப்பிற்கு பரேட் சட்டம் மிகவும் முக்கியமானது.
பொது வைப்புத் தொகை
கடந்த 11 மாதங்களில் 557 பேருக்கு மட்டுமே பரேட் சட்டம் பயன்படுத்தப்பட்டு அதன் மதிப்பு ரூ. 38 பில்லியன் ஆகும்.
இது மொத்த கடன் தொகையில் 0.4 வீதம் என்பதோடு, பொது வைப்புத் தொகையில் இருந்து வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு, திருப்பிச் செலுத்தாத போது, பணத்தை மீளப்பெறுவதற்கு இந்த பரேட் சட்டம் இருப்பது முக்கியமானது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |