பராலிம்பிக்கில் உலக சாதனை படைத்த ஸ்ரீலங்கா வீரர்- மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு
பராலிம்பிக்கில் உலக சாதனை படைத்த ஸ்ரீலங்கா வீரருக்கு புதிய வீடு ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதமர் மஹிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவிற்கும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடு ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்திலிருந்து குறித்த வீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய உரிய வீடமைப்பு திட்டமொன்றை தெரிவுசெய்து குறித்த வீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணாயக்காரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.