ஈரானுக்கு பேரிடி : துணை இராணுவ தளபதி ட்ரோன் தாக்குதலில் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்.
ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த அபு பக்கீர் அல்-சாதி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனமொன்றை இலக்குவைத்து
வாகனமொன்றை இலக்குவைத்து புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த மூவரில் குறித்த தளபதியும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடந்த பகுதி, பாக்தாத்தின் கிழக்கே, "ஆயுதப் பிரிவுகளின் கோட்டையாக கருதப்படுகிறது"
குண்டுவெடிப்பு குறித்து
அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை நேரடியாகத் திட்டமிடுவதற்கும் பங்கேற்பதற்கும் பொறுப்பான கத்தாயிப் ஹெஸ்பொல்லா தளபதியை கொன்றதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) மையம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
USCENTCOM Conducts Strike Killing Kata’ib Hezbollah Senior Leader
— U.S. Central Command (@CENTCOM) February 7, 2024
At 9:30 p.m. (Baghdad Time) February 7, U.S. Central Command (CENTCOM) forces conducted a unilateral strike in Iraq in response to the attacks on U.S. service members, killing a Kata’ib Hezbollah commander… pic.twitter.com/Zhkjimx5UG
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |