குழந்தை உயிரிழப்பு - வைத்தியசாலை மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Sumithiran
குழந்தை உயிரிழப்பு
ஆனமடுவ, இஹல திவுல்வெவ பிரதேசத்தை அண்மித்த திவுல்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த நான்கு வயது குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துஷேன் சஞ்சித என்ற தமது குழந்தையே உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
பெற்றோர் குற்றச்சாட்டு
ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தையை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பத்மினி அபேசிங்க தெரிவிக்கையில், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
