அளம்பிலில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று (19) மிகச் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னதாக மாவீரர்களது பெற்றோர் உறவினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மண்டபத்தில் மாவீரர்களில் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கலை நிகழ்வுகள்
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் கருத்துரைகளும் இடம் பெற்றதையடுத்து மதிய உணவு வழங்க வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில், அளம்பில்வடக்கு ,உப்புமாவெளி, உடுப்புக்குளம் பகுதியில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டனர்.
செய்தி - தவசீலன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



