பாரிஸ் தொடருந்து நிலையத்தில் கத்திகுத்து தாக்குதல் : பலர் படுகாயம்
France
By Sumithiran
பிரான்ஸின் பாரிஸில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தின் போது ஒருவர் வயிற்றில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
மாலி நாட்டை சேர்ந்தவர்
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இத்தாலிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்ததாகவும் மாலி நாட்டவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அண்மைக்காலமாக பாரிஸில் பல இடங்களில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. டிசம்பரில், ஈபிள் டவர் அருகே சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தலைநகர் கரே டு நோர்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி