உலகில் அதிக வாகன நெரிசல் கொண்ட நகரங்கள் : முதலிடத்தில் உள்ள நகரம் எது தெரியுமா..!
2023ஆம் ஆண்டில் உலகில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டொம் டொம் (Tom Tom) என்னும் நிறுவனம் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை தரவரிசைப்படுத்தியுள்ளது.
6 கண்டங்களில் உள்ள 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களில் சராசரி பயண நேரம், எரிபொருள் செலவுகள் மற்றும் CO2 உமிழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தில் லண்டன்
இதில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணம் 37 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன.
இதற்கு அடுத்தபடியாக அயர்லாந்தின் டப்லின் நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 29 நிமிடங்கள் 30 விநாடிகளாகின்றன.
கனடாவின் ரொறன்ரோ நகரம்
3வது இடத்தில் கனடாவின் ரொறன்ரோ நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 29 நிமிடங்களாகின்றன.
அதனைத் தொடர்ந்து 4வது இடத்தில் இத்தாலியின் மிலன் நகரமும், 5வது இடத்தில் பெரு நாட்டின் லிம்பா நகரமும் உள்ளன. 6வது இடத்தில் இந்தியாவின் பெங்களூரு நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் தேவைப்படுகிறது.
7வது இடத்தில் புணே நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 27 நிமிடங்கள் ஆகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |