நாளை கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்!
விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நாளை தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை ஆகிய நாள்களில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாது.
அதேபோல் எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முன்வைப்பார்.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.