நெருக்கடிகளுக்கு மத்தியில் கூடியது நாடாளுமன்றம்! ஆரம்பமே கூச்சலும் குழப்பமும் - நேரலை..
நெருக்கடிகளுக்கு மத்தியில் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்றையதினம் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. எனினும் நாடாளுமன்றத்தில் இன்றைய தினத்தில் உறுப்பினர்கள் அதிகளவில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
நாடாளுமன்ற அமர்வு இன்றுமு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் மு.ப. 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இன்றைய தினம் பொது அலுவல்களை அடுத்து நீதிமன்ற அவமதிப்புச் சட்ட தனியார் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
அதனை அடுத்து, பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
நாடாளுமன்ற அமர்வின் நேரலை,