நாடாளுமன்ற இரகசிய வாக்கெடுப்பின் முடிவு வெளியானது! தெரிவானார் பிரதி சபாநாயகர்(நேரலை)
மூன்றாம் இணைப்பு
நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், சிறிலங்கா பொதுஜன பெரமுனா சார்பில் அஜித் ராஜபக்ச பரிந்துரைக்கப்பட்டு 109 வாக்குகள் பெற்று பிரதி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்னவால் 78 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ரோஹினி கவிரத்னவின் பெயரும் ஆளும் கட்சி சார்பாக அஜித் ராஜபக்சவின் பெயரும் முன்மொழியப்பட்டது.
முதலாம் இணைப்பு
இன்று காலை 10.00 மணி முதல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகி நடைபெற்று வருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர் முதன்முறையாக கூடும் நிலையில் ஆசன ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆளும் தரப்பில் அரச தலைவரின் ஆசனத்திற்கு அருகில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
